தர்மபுரி: கிருஷ்ணகிரி- தர்மபுரி சாலையில் குளம்போல் தேங்கிய மழை நீரால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தர்மபுரியில் உள்ள, கிருஷ்ணகிரி சாலையில், அதிகரித்த வாகன போக்குவரத்தால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தர்மபுரி நான்கு ரோட்டில் இருந்து குண்டல்பட்டி வரை, நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. இப்பகுதிகளில், சாலையோரம் முறையான மழை நீர் கால்வாய் அமைக்க, பொதுப்பணித்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தர்மபுரி ராமக்காள் ஏரி அருகே உள்ள, கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையில், சிறு மழை பெய்தாலும், மழை நீர் செல்ல முடியாமல், சாலையில் குளம் போல் தேங்கி வருகிறது. இதனால், இந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவது, தொடர் கதையாக உள்ளது. இதை தடுக்க, ராமக்காள் ஏரி பகுதி மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை நீர் செல்லும் கால்வாயை, பொதுப்பணித்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மீட்டெடுத்து, கால்வாய் அமைத்து, இந்த சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளின் கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE