சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நண்பரின் மனைவியை கொன்ற அசாம் மாநில வாலிபர் கைது

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூர் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த நண்பரின் மனைவியை, சுவற்றில் மோதி கொலை செய்த, அசாம் மாநில வாலிபர், 10 மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கொண்டா, 25; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த, குந்துமாரனப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். இவர், அசாமை சேர்ந்த ரிங்கி, 20, என்ற பெண்ணை காதலித்து, 2019 நவ.,ல்

ஓசூர்: ஓசூர் அருகே, ஆசைக்கு இணங்க மறுத்த நண்பரின் மனைவியை, சுவற்றில் மோதி கொலை செய்த, அசாம் மாநில வாலிபர், 10 மாதத்துக்கு பின் கைது செய்யப்பட்டார். அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அஜய்கொண்டா, 25; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த, குந்துமாரனப்பள்ளியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றினார். இவர், அசாமை சேர்ந்த ரிங்கி, 20, என்ற பெண்ணை காதலித்து, 2019 நவ.,ல் திருமணம் செய்து கொண்டார். குந்துமாரனப்பள்ளியில் இவரும் வசித்தனர். தான் வேலை செய்யும் அதே நிறுவனத்தில், காவலாளியாக பணியாற்றும் அசாம் மாநிலத்தை சேர்ந்த பிஜய் ரிக்கியாசன், 27, என்பவரை, தன் வீட்டில், அஜய்கொண்டா தங்க வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச், 11ல் இரவு, அஜய்கொண்டா பணிக்கு சென்ற பின், ரிங்கியை தன் ஆசைக்கு இணங்க வைக்க, பிஜய் ரிக்கியாசன் முயற்சித்தார். அப்போது, தப்பி செல்ல முயன்றவரை பிடித்து தள்ளியதில், சுவற்றில் தலை மோதி, ரிங்கி உயிரிழந்தார். பிஜய் ரிக்கியாசன் அங்கிருந்து தப்பினார். தலையில் உள்காயத்தை அறியாத, கெலமங்கலம் போலீசார், ரிங்கி தற்கொலை செய்ததாக வழக்குப்பதிந்தனர். கடந்த, 6ல் நடந்த ஓசூர், ஆர்.டி.ஓ., விசாரணையில், ரிங்கியின் கணவர் அஜய்கொண்டா மற்றும் பிஜய் ரிக்கியாசன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, ஆசைக்கு இணங்க மறுத்த ரிங்கியை, சுவற்றில் தள்ளி, பிஜய் ரிக்கியாசன் கொன்றது தெரிந்தது. இதையடுத்து அவரை, கெலமங்கலம் போலீசாார், நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X