பொது செய்தி

தமிழ்நாடு

செவிலியர் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்க அழைப்பு: கலெக்டர்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழங்குடியின மாணவியர், செவிலியர் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் எனவும், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் நலத்துறை மூலம், 2019 - 20ம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழங்குடியின மாணவியர், செவிலியர் பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் எனவும், மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பழங்குடியினர் நலத்துறை மூலம், 2019 - 20ம் ஆண்டிற்கான விரிவான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தில், இந்திய நர்சிங் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட செவிலியர் பயிற்சி மையங்களில், செவிலியர் பட்டயப்படிப்பில் சேர்ந்து, மூன்று ஆண்டுகள் கல்வி பயில ஆகும் கட்டணம் முழுவதையும், அரசே ஏற்கும் வகையில், அரசாணை வந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சி, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிடப்பள்ளியில், கல்வி பயின்றுள்ள பழங்குடியின மாணவியர், மார்ச், 2020ல் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 2 மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்டவைகளின் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலத்துக்கு, தகுதியான மாணவியர் பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண், 26ல் நேரடியாகவோ வரும், 22க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X