சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை மிரட்டி பலாத்காரம்: மேஸ்திரிக்கு 39 ஆண்டு சிறை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: சிறுமியை மிரட்டி, பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மேஸ்திரிக்கு, 39 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள, நத்தகயத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி ஆசைதம்பி, 31; இவரது உறவினரான தந்தை இல்லாத, ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமியை, கடந்த, 2018 ஜன., 30ல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில்,

கிருஷ்ணகிரி: சிறுமியை மிரட்டி, பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய மேஸ்திரிக்கு, 39 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி, மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே உள்ள, நத்தகயத்தை சேர்ந்த கட்டட மேஸ்திரி ஆசைதம்பி, 31; இவரது உறவினரான தந்தை இல்லாத, ஒன்பதாம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமியை, கடந்த, 2018 ஜன., 30ல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் கர்ப்பமானார். இதையறிந்த, சைல்டு லைன் அமைப்பினர், சிறுமியை மீட்டு, ஓசூர் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு, சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்பகம், ஆசைதம்பி மீது, போக்சோ, கொலை மிரட்டல் உள்பட பல பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தார். கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, நேற்று தீர்ப்பளித்தார். ஆசைதம்பிக்கு, போக்சோ பிரிவில், 14 ஆண்டு சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம்; தந்தை இல்லாத உறவுக்கார பெண்ணை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்ததாக, 10 ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம்; சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததால், 14 ஆண்டு சிறை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம்; சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்ததற்கு, ஓராண்டு சிறை, 1,000 ரூபாய் அபராதம் என, மொத்தம், 39 ஆண்டு சிறை தண்டனை, 61 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். மேலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் கலையரசி ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X