புதுடில்லி: வாட்ஸ் ஆப்பில் புதிய பிரைவசி கொள்கைகள் குறித்து அந்நிறுவனம் விரிவாக விளக்கமளித்துள்ளது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய ‛கட்டாய' பிரைவசி கொள்கைகளை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில், பயனர்களின் தகவலை அதன் தாய் நிறுவனமான பேஸ்புக் உடன் பகிர்ந்து கொள்ளும் என கூறப்பட்டது. இது போன்ற சில கொள்கைகளை பயனர்கள் பிப்.,8ம் தேதிக்குள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இல்லையெனில், வாட்ஸ்ஆப் சேவையில் இருந்து விலகி கொள்ளலாம் எனவும் வாட்ஸ்ஆப் எச்சரித்து இருந்தது. இது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பலரும் வாட்ஸ்ஆப்பில் இருந்து வெளியேறி வேறு மெசேஜிங் செயலிகளுக்கு படையெடுத்தனர்.
இந்நிலையில், தங்களது பிரைவசி கொள்கைகள் குறித்து வாட்ஸ்ஆப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. ‛நாங்கள் சில வதந்திகளை நிவர்த்தி செய்ய விரும்புகிறோம், உங்கள் தனிப்பட்ட மெசேஜ்கள் தொடர்ந்து எண்ட் டூ எண்ட் என்க்ரிப்ஷன் செய்யப்பட்டு பாதுகாப்பதில் நாங்கள் 100 சதவீதம் தெளிவாக இருக்கிறோம்,' எனக்கூறி வாட்ஸ் ஆப் வெளியிட்ட விளக்கம்:
* புதிய பிரைவசி அப்டேட் ஆனது நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் பகிரும் மெசேஜ்களின் தனியுரிமையை எந்த வகையிலும் பாதிக்காது.
வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றில் தனிப்பட்ட தகவல்களோ, அழைப்புகளோ கண்காணிக்கப்படாது.

* உங்கள் தொடர்பு விவரங்களை சேமித்து வைக்க மாட்டோம்.
* வாட்ஸ்ஆப் மற்றும் பேஸ்புக் ஆகியவை நீங்கள் பகிர்ந்த இருப்பிட விவரத்தை வாட்ஸ்ஆப் பார்க்காது.
* பயனர்களின் தொடர்பு எண்களை பேஸ்புக்குடன் வாட்ஸ்ஆப் பகிராது.
* வாட்ஸ்ஆப் குரூப்கள் தனிப்பட்ட முறையிலேயே தொடர்ந்து செயல்படும்.
* ஒரு குறிப்பிட்ட காலம் தாண்டி உங்கள் மெசேஜ்களை நீங்களே மறைக்க செய்யலாம்.
* பயனர்கள் தங்கள் தகவல்களை டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
- இவ்வாறு விளக்கமளித்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE