அரசியல் செய்தி

தமிழ்நாடு

இலங்கை தூதரகம் முற்றுகை : வைகோ உட்பட 200 பேர் கைது

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சென்னை : முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதை கண்டித்து, இலங்கை துாதரகத்தை முற்றுகையிட்ட, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட, 200 பேர் கைது செய்யப்பட்டனர்.இலங்கை, யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்டிருந்த, முள்ளி வாய்க்கால் இன படுகொலை நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில்

சென்னை : முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் இடிக்கப்பட்டதை கண்டித்து, இலங்கை துாதரகத்தை முற்றுகையிட்ட, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ உள்ளிட்ட, 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை, யாழ்ப்பாண பல்கலையில் அமைக்கப்பட்டிருந்த, முள்ளி வாய்க்கால் இன படுகொலை நினைவு சின்னம் இடிக்கப்பட்டதற்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் ம.தி.மு.க., பொது செயலர் வைகோ தலைமையில், 200க்கும் மேற்பட்டோர், நேற்று இலங்கை அரசை கண்டித்து, சென்னையில் உள்ள இலங்கை துாதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.இதையடுத்து, வைகோ உட்பட, 200 பேரை, நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து, சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X