ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜன., 25 வரை தனிமை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜன., 25 வரை தனிமையில் அடைக்க, அந்நாடு நீதிமன்றம் உத்தரவிட்டது.ஜன.,9ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் கிருபை, வளன்கவுசிக், கினிங்ஸ்டன், மிக்கேயாஸ் உள்ளிட்ட 9 பேரை, இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுக முகாமிற்கு கொண்டு சென்றனர். இம்மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள்

ராமேஸ்வரம் : இலங்கை கடற்படை கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஜன., 25 வரை தனிமையில் அடைக்க, அந்நாடு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜன.,9ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் கிருபை, வளன்கவுசிக், கினிங்ஸ்டன், மிக்கேயாஸ் உள்ளிட்ட 9 பேரை, இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன் துறைமுக முகாமிற்கு கொண்டு சென்றனர். இம்மீனவர்களை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கைதான மீனவர்களை நேற்று யாழ்பாணம் மீன்துறை அதிகாரியிடம், கடற்படையினர் ஒப்படைத்தனர். பின் மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். கொரோனா பரிசோதனைக்காக, மீனவர் களை ஜன.,25 வரை தனிமை அறையில்அடைக்க நீதிபதி அந்தோணிபிள்ளை சூட்சன் உத்தரவிட்டார்.மீனவர்கள் காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் தனிமை அறையில் அடைக்கப்பட்டனர். ஏற்கெனவே 36 தமிழக மீனவர்கள் தனிமை அறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X