நாமக்கல்: தமிழ்நாடு கொசு ஒழிப்பு களப்பணியாளர் நலச்சங்கத்தின் சார்பில், நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் அளிக்கப்பட்ட மனு விபரம்: கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களாக, கடந்த, 10 ஆண்டுகளாக, தினக்கூலியாக, 285 ரூபாய்க்கு பணியாற்றி வருகிறோம். வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு சுகாதார விழிப்புணர்வு, கொசு ஒழிப்பு பணி செய்து வருகிறோம். நாங்கள் செல்லும் கிராமத்திற்கு, 30 கி.மீ., வரை சென்று இந்த பணியை செய்து வருகிறோம். பஸ் கட்டணம், 50 ரூபாய் வரை செலவாகிறது. மீதமுள்ள, 235 ரூபாயை கொண்டு, எங்கள் குடும்பத்தை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் முடியவில்லை.எனவே, தினக்கூலியை, 500 ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும், வேலை பார்க்கும் பழைய ஊழியர்களை நிறுத்தி விட்டு, புதிய ஊழியர்களை நியமனம் செய்வதை கைவிடவேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE