பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே, பாதரையில், தி.மு.க., சார்பில் வரும், 19ல், மக்கள் சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதுகுறித்து, தலைமை செயற்குழு உறுப்பினரும், பள்ளிபாளையம் ஒன்றிய பொறுப்பாளருமான யுவராஜ் கூறியதாவது: குமாரபாளையம் தொகுதிக்குட்பட்ட பள்ளிபாளையம் ஒன்றியம் பாதரையில் மக்கள் சபை கூட்டம் வரும், 19ல் நடக்கிறது. இதில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிறார். காலை, 8:30 மணிக்கு வெப்படையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பாதரையில் நடக்கும் மக்கள் சபை கூட்டத்தில் அவர் பேசுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE