பொது செய்தி

தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
மோகனூர்: தமிழரின் பாரம்பரிய திருவிழா, தமிழர் திருநாள், பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. மண் பானையில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படையல் வைத்து, வழிபாடு செய்வது, தமிழரின் பழக்கம். அதன்படி, மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார். விழாவை

மோகனூர்: தமிழரின் பாரம்பரிய திருவிழா, தமிழர் திருநாள், பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. மண் பானையில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைத்து, சூரிய பகவானுக்கும், கால்நடைகளுக்கும் படையல் வைத்து, வழிபாடு செய்வது, தமிழரின் பழக்கம். அதன்படி, மோகனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் கலைச்செல்வி தலைமை வகித்தார். விழாவை முன்னிட்டு, மண் பானையில் வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து, செங்கரும்பு, மஞ்சள் கொத்து வைத்து, பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, கர்ப்பிணிகள், பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவரும், வேட்டி, சேலை அணிந்து கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர்கள் செல்வ ராஜா, ரகுபதி, மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X