நூல் விலையை குறைக்க கோரி மனு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நூல் விலையை குறைக்க கோரி மனு

Added : ஜன 12, 2021
Share
நாமக்கல்: வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் வழங்கிய மனு விபரம்: வெண்ணந்தூர் பகுதியில், 50 ஆயிரம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. ஜவுளி ஏற்றுமதி குறைவு, ஜி.எஸ்.டி., கொரோனா தொற்று போன்ற, பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. தற்போது எந்தவித முகாந்திரமும் இல்லாமல், பருத்தி நூலின் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 40ம் எண்ணுடைய

நாமக்கல்: வெண்ணந்தூர் விசைத்தறி துணி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், நாமக்கல் கலெக்டர் மெகராஜிடம் வழங்கிய மனு விபரம்: வெண்ணந்தூர் பகுதியில், 50 ஆயிரம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. ஜவுளி ஏற்றுமதி குறைவு, ஜி.எஸ்.டி., கொரோனா தொற்று போன்ற, பல்வேறு இடர்ப்பாடுகள் ஏற்பட்டன. தற்போது எந்தவித முகாந்திரமும் இல்லாமல், பருத்தி நூலின் விலை, 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 40ம் எண்ணுடைய நூல், 50 கிலோ, 8,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது, படிப்படியாக ஒரு மாதத்தில், 12 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த விலை ஏற்றம் நெசவாளர்களை நஷ்டமடையச் செய்துள்ளது. விசைத்தறி கூடங்களை மூடும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அரசு விரைவான நடவடிக்கை எடுத்து நூல் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X