நாமக்கல்: இன்று, அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, ஒரு லட்சத்து, எட்டு வடைகளால், மாலை அணிவிக்கப்படுகிறது.
நாமக்கல் நகரின் மையத்தில், பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஒரே கல்லினால் உருவான, 18 அடி உயரத்தில் எழுந்தருளிய ஆஞ்சநேயர், நின்ற நிலையில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஆண்டு தோறும், மார்கழி அமாவாசை, மூல நட்சத்திரத்தில், அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு விழா, இன்று கொண்டாடப்படுகிறது. அதிகாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு, அபி ?ஷகம், அதையடுத்து, ஒரு லட்சத்து, எட்டு வடைகளால் மாலை சாற்றப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மதியம், 12:00 மணிக்கு, சிறப்பு அபி ?ஷகம், 1:00 மணிக்கு, சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் முழுவதும், வண்ணப் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் உள்ளதால், பக்தர்கள் சமூக இடைவெளியில் சுவாமி தரிசனம் செய்யும் வகையில், இன்று காலை, 5:00 முதல், இரவு, 9:00 மணி வரை அனுமதிக்கப்படுவர். விழாவுக்கு வருகை தரும், பக்தர்களின் வசதிக்காக, நாமக்கல் கோட்டை சாலையில், போக்குவரத்து மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்புக்காக, எஸ்.பி., சக்தி கணேசன் தலைமையில், 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE