பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுமான தொழிலாளருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு, அரசின் சார்பில் அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதிய தாரர்களுக்கு, அரசின் சார்பில் அரிசி, வெல்லம், நெய், முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதாக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரவக்குறிச்சி பகுதியில் கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்தவர்களுக்கு வாரிய அஞ்சல் அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்ற அரசு ஆவணங்களை சரிபார்த்து அதிகாரிகள் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினர்.


* கிருஷ்ணராயபுரம் தாலுகாவில், தொழிலாளர்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் பணி நடக்கிறது. வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் கிருஷ்ணராயபுரம் யூனியன் அலுவலக வளாகத்தில் அடையாள அட்டையை கணினியில் பதிவு செய்து அத்துடன் பொங்கல் பொருட்கள் தரப்பட்டன. 1,000க்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X