கரூர்: கரூர் மாவட்டம், ஆண்டாங்கோவில் தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார், 37; கரூரில் வணிகவரி துறை அலுவலராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று மதியம் காரில், ஈரோடு வணிக வரித்துறை அலுவலகத்துக்கு சென்றார். அவருடன், வணிகவரி ஆய்வாளர் கவுதமி, 31, இளநிலை உதவியாளர் மோகன், 27, அலுவலக உதவியாளர் லாவண்யா, 31, இவரது மகள் ஆலியா, 7, ஆகியோரும் சென்றனர். காரை சிவக்குமார் ஓட்டியுள்ளார். கார், புன்னம் சத்திரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது காரும், கொடுமுடியை சேர்ந்த ?ஹன்றி, 47, என்பவர் ஓட்டி சென்ற பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அதில், சிவக்குமார் உள்பட, ஆறு பேருக்கும் காயம் ஏற்பட்டது. அனைவரும், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE