பொது செய்தி

தமிழ்நாடு

3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
சென்னை: பொங்கல் விடுமுறையான வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து
3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை

சென்னை: பொங்கல் விடுமுறையான வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரையிலான 3 நாட்களுக்கு கடற்கரை, பூங்காக்களுக்கு அனுமதியில்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காணும் பொங்கல் அன்று கடற்கரைகளில் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் கொரோனா தொற்று ஏற்படுவதை தடுக்கும் வகையில், மெரினா உள்ளிட்ட அனைத்து கடற்கரைகளிலும் காணும் பொங்கல் அன்று மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news



இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில், செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அண்ணா உயிரியியல் பூங்கா, மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து சுற்றுலா இடங்கள் மற்றும் சென்னையில் உள்ள கிண்டி தேசிய பூங்காவிலும் மற்றும் அனைத்து கடற்கரையிலும் அளவுக்கு அதிகமான பொதுமக்கள் கூட்டம் கூடுவதால் மேற்கண்ட அனைத்து இடங்களிலும் ஜன.,15, 16, 17 ஆகிய விடுமுறை நாட்களில் மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கவிஞர் நளினி விநாயகமூர்த்தி கண்ணகி நகர் விதி விலக்கு :-தை பிறந்தாலும் -வழி பிறக்க மறுக்கின்றது....???மெரினாவிற்கு........!!!- கவிஞர் நளினி விநாயகமூர்த்தி
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-ஜன-202110:36:20 IST Report Abuse
S.Baliah Seer அதாவது மக்கள் ஓசியில் செல்லும் இடங்களுக்கு மட்டுமே தடை.
Rate this:
Cancel
13-ஜன-202106:44:20 IST Report Abuse
Saai Sundharamurthy A.V.K தியேட்டர்களில் படம் ஓட வேண்டுமே ! ஐயகோ !😊
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X