பொது செய்தி

தமிழ்நாடு

உடல் நலக்குறைவால் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் உயிரிழப்பு

Added : ஜன 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரிழந்தார். கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் பா.வெ.தாமோதரன், 71. முன்னாள் முதல்வர் எ.ம்ஜி.ஆர்., அ.தி.மு.க., வை துவங்கிய போது, 1972 ல் பொங்கலுார் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டவார் பச்சார்பாளையத்தை சேர்ந்த ப.வெ.தாமோதரன். கடந்த, 33 ஆண்டுகள்
 உடல் நலக்குறைவால் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் உயிரிழப்பு

கோவை:கொரோனா தொற்று குணமடைந்த நிலையில் நுரையீரல் பாதிப்பால், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தாமோதரன் உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஒன்றியம் பச்சார்பாளையத்தை சேர்ந்தவர் பா.வெ.தாமோதரன், 71. முன்னாள் முதல்வர் எ.ம்ஜி.ஆர்., அ.தி.மு.க., வை துவங்கிய போது, 1972 ல் பொங்கலுார் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டவார் பச்சார்பாளையத்தை சேர்ந்த ப.வெ.தாமோதரன். கடந்த, 33 ஆண்டுகள் சுல்தான்பேட்டை ஒன்றிய கழக செயலாளராக பணியாற்றி வந்தார். பொங்கலூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த, 2002 ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து அவர் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதே ஆண்டு கோவை புறநகர் மாவட்ட கழக செயலாளராக அப்போதையை முதல்வர் ஜெ., வால் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் பொறுப்பில் இருந்தார்.இதன் பின் கடந்த, 2006 ம் ஆண்டு பொங்கலுார் தொகுதியில் போட்டியிட்ட போது, 54 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதன்பின், 2010 ம் ஆண்டு கோவை மாவட்ட ஆவின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த, 2018 ம் ஆண்டு வரை இப்பொறுப்பு வகித்தார். கடந்த, டிச.,15 ம் தேதி கொரோனா பாதிப்புக்காக கோவை நீலாம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையால் அவருக்கு கொரோான தொற்று நீங்கியது. இந்நிலையில் அவருக்கு நுரையீரலில் பாதிப்பால் தொடர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை, 6:05 மணிக்கு உயிரிழந்தார்.
மறைந்த தாமோதரனுக்கு விஜயம் என்ற மனைவி, கவிதா, ராதிகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது ஒரே மகன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி முன்பு நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


எம்.ஜி.ஆர்., உடன் சந்திப்பு

கடந்த, 1977 ம் ஆண்டு கட்சி பிரசாரத்துக்காக சைக்கிள் பயணம் மேற்கொண்ட தாமோதரன் விபத்தில் சிக்கி கால் எலும்பு முறிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நேரில் வந்து தாமோதரனை சந்தித்து சென்றார். தன்னை தேடி வரும் கட்சியினருக்கு சிறந்த உபசரிப்பு அளிக்கக் கூடியவர். இதனால் கட்சியினர் இடையே செல்வாக்கு அதிகம் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
17-ஜன-202116:13:08 IST Report Abuse
periasamy ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றேன்
Rate this:
Cancel
Muthukumaran - Evry,பிரான்ஸ்
16-ஜன-202103:50:45 IST Report Abuse
Muthukumaran ஆழ்ந்த அனுதாபங்கள். முத்துக்குமரன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X