அறிவியல் ஆயிரம்
முகக்கவசம் அவசியம்
கொரோனாவுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு சில நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இருப்பினும் கொரோனாவுக்கு எதிராக மக்கள்தொகையில் பெரும் பாலானோருக்கு ஏற்படும் 'ெஹர்டு இம்யூனிட்டி' எனும் மந்தை எதிர்ப்பு சக்தி, 2021க்குள் உலகளவில் உருவாகாது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. தடுப்பூசி பெரும்பாலான நாடுகளில் நடைமுறைக்கு வந்து மக்களுக்கு செலுத்தப்பட வேண்டும். அதுவரை கொரோனா பரவலை தடுக்கும் சமூக இடைவெளி, முகக்கவசம், கை கழுவுதலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது.
தகவல் சுரங்கம்
சாலைகளின் வடிவமைப்பு
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் 1950ல் தொடங் கப்பட்டது. இது சி.எஸ்.ஐ.ஆர்., அமைப்பின் கீழ் செயல்படும் ஒரு ஆய்வகம். தலைமையகம் புதுடில்லி. இது சாலை, விமான ஓடுபாதையின் வடிவமைப்பு, கட்டுமானம், பராமரிப்பு, மேலாண்மை போன்றவற்றில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பணிகளை மேற்கொள் கிறது. போக்குவரத்து நெரிசல், போக்குவரத்து திட்டமிடல் போன்ற பிரிவுகளிலும் பணியாற்றுகிறது. நடுத்தர, பெரிய நகரங்களுக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டங்கள், மலை பகுதி உட்பட வெவ்வேறு நில சாலைகளின் மேலாண்மையை கவனிக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE