விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சாலை போட வலியுறுத்தி, கிராம மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த விஜயமாநகரம் 9வது வார்டு, பாசி அம்மன்கோவில் தெருவில் சாலை வசதியின்றி மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது.இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து மாவட்ட, ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அடுத்த கட்டமாக விருத்தாலம் - உளுந்துார்பேட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE