பொது செய்தி

தமிழ்நாடு

விலையில்லா சைக்கிள்: எம்.எல்.ஏ., வழங்கல்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடந்த விழாவிற்கு, மாவட்டக் கல்வி அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை, விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில், 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 933 மாணவர்களுக்கு, விலையில்லாத சைக்கிள்களை பாண்டியன் எம்.எல்.ஏ.,

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டையில், பள்ளி மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், நடந்த விழாவிற்கு, மாவட்டக் கல்வி அலுவலர் மோகன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை, விஜயலட்சுமி வரவேற்றார். விழாவில், 8 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 933 மாணவர்களுக்கு, விலையில்லாத சைக்கிள்களை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார்.முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட சேர்மன் திருமாறன், ஒன்றிய செயலாளர்கள் ராஜாங்கம், அசோகன், சேர்மன் கருணாநிதி மாவட்ட அவைத் தலைவர் குமார், நகர செயலாளர் விஜயன், ஜெ., பேரவை சந்தர் ராமஜெயம், கூட்டுறவு வங்கி தலைவர்கள் வசந்த், தன கோவிந்தராஜன், கணேஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் ரங்கம்மாள், தமிழரசி லோகபரணி, பாஸ்கர், ரவி உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.தலைமை ஆசிரியை சுந்தரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X