ஆயுதம் ஏந்தி போராட்டம்? : அமெரிக்காவில் அதிர்ச்சி

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழா நடக்கவுள்ள, 20ம் தேதி வரை, அமெரிக்காவின்,50 மாகாணங்களிலும், ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட, அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக, உளவு செய்திகள் தெரிவிக்கின்றன.அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ்,
மாகாணங்கள், ஆயுதம், போராட்டம், பீதி, டிரம்ப், அமெரிக்கா, அதிர்ச்சி

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக, ஜோ பைடன் பதவியேற்கும் விழா நடக்கவுள்ள, 20ம் தேதி வரை, அமெரிக்காவின்,50 மாகாணங்களிலும், ஆயுதம் ஏந்திய போராட்டங்களில் ஈடுபட, அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளதாக, உளவு செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபராக, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த, ஜோ பைடன், 20ம் தேதி பதவியேற்க உள்ளார். அவருடன், இந்தியாவை பூர்வீகமாக உடைய கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவியேற்க உள்ளார்.


மோசடி


'அதிபர் பதவிக்கான தேர்தலில் மோசடி நடந்துள்ளது. தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது' என, குடியரசு கட்சியைச் சேர்ந்த, அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.தேர்தல் முடிவுகளை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.தேர்தல் முடிவுகளை அங்கீகரிப்பதற்காக, பார்லி.,யின் கூட்டுக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அப்போது, 'கேப்பிடோல்' எனப்படும் பார்லிமென்ட் வளாகத்துக்குள் நுழைந்து, நுாற்றுக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.இந்த திடீர் தாக்குதல் மற்றும் வன்முறையை, அமெரிக்க போலீஸ், உளவு அமைப்புகள் எதிர்பார்க்கவில்லை.

புதிய அதிபராக, ஜோ பைடன், 20ம் தேதி பதவியேற்க உள்ளதால், அனைத்து அமைப்புகளும் உஷார் நிலையில் உள்ளன.பதவியேற்பு விழா நடக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் வேறு சில அமைப்புகள்,போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து, தங்கள் இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளன. வாஷிங்டனில், 17 - 20ம் தேதி வரையிலும், மற்ற மாகாணங்களில், 16 - 20ம் தேதி வரையிலும் பல்வேறு போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, 17ம் தேதி, ஆயுதம் ஏந்திய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக, உளவு அமைப்பான, எப்.பி.ஐ., எச்சரித்துள்ளது.


தீர்மானம்


'டிரம்புக்கு எதிராக கண்டன தீர்மானம் வெற்றி அடைந்து, பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டால், போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்' என, அவரது ஆதரவாளர்கள், இணையதளங்களில் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இதைத் தவிர, 20ம் தேதி பதவியேற்பு விழாவின்போது, வாஷிங்டனை முற்றுகையிட்டு, பேரணி நடத்தவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, உளவு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து, எப்.பி.ஐ., விசாரித்து வருகிறது.முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


பைடனுக்கு ஆபத்து?


ஜோ பைடன், கமலா ஹாரிஸ், பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது. இது தொடர்பான தகவல்களை உளவு அமைப்புகள் சேகரித்து வருகின்றன. அவர்களுக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.டிரம்ப் ஆதரவாளர்கள், ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், அதிபர் பதவியேற்பு விழாவை சீர்குலைக்கும் அபாயம் உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன. இதனால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வாஷிங்டனில், 24ம் தேதி வரை அவசர நிலையை பிறப்பித்துள்ளார், அதிபர் டொனால்டு டிரம்ப்.


இன்று ஓட்டெடுப்பு


வன்முறையைத் தூண்டியதாக, அதிபர் டிரம்ப் மீது, பார்லி.,யில் இரண்டு கண்டனத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மீது, இன்று ஓட்டெடுப்பு நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதிநிதிகள் சபையில், ஜனநாயகக் கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. செனட் சபையில், இரண்டு கட்சிகளுக்கும், தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர். அதனால், இந்த ஓட்டெடுப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202123:55:53 IST Report Abuse
kulandhai Kannan இடது சாரி லிபரல்கள் இதுநாள்வரை திட்டியதையெல்லாம், இன்று அவர்களையே திங்க வைத்த அளவில், டிரம்புக்கு வெற்றியே.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
13-ஜன-202122:09:17 IST Report Abuse
Vijay D Ratnam திட்டமிட்டபடி நம்ம ஊர்ல ஸ்டெர்லைட், சேலம் எட்டுவழிச்சாலை திட்டத்தை ஒழித்துக்கட்டியது போல் எல்லாமே திட்டமிட்டபடி அக்யுரேட்டா நடக்குது. திட்டமிட்டபடி ஒரு வருடங்கள் முன்பாக டொனால்ட் ட்ரம்ப் தரப்புக்கு எதிராக நடுநிலை நக்கி ஊடகங்கள் என்ற பெயரில் ட்ரம்பை காலி செய்யும் அலையை தொடங்கி, திட்டமிட்டபடி அமெரிக்க கறுப்பர்களை அவருக்கு திருப்பி, திட்டமிட்டபடி சீனாவின் வுஹான் வைரஸை பரப்பி, திட்டமிட்டபடி தேர்தல் நேரத்தில் அதிபருக்கு எதிராக ஒரு பேரலையை உருவாக்கி கனகச்சிதமாக வேலை நடந்தது. இறுதியாக திட்டமிட்டபடி சீன ஸ்லீப்பர் செல் அமெரிக்க அதிபராக ஜனவரி 20 ந்தேதி பதவியேற்பு நிகழ்வு நடைபெறும். அதற்கு முன் திட்டமிட்டபடி இது போன்ற போராட்டங்கள், கலவரங்கள் நடைபெறுகிறது. well preplanned project. made in USA by China.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-ஜன-202114:48:10 IST Report Abuse
Sridhar அராஜகம் செய்யலாம் என்று செய்தே காட்டியவர்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த லிபரல்களும் இடதுசாரிகளும் தாம். கடந்த ஆறு மாதங்களாக அமெரிக்க முழுவதும் எங்கு பார்த்தாலும் கலவரம், தீ வய்ப்பு ஆகியவை சர்வ சகஜமாக நடைபெற்றன. அப்போது இதே சமூக வலய தளங்களும் மீடியா களும் வாய்பொத்தி மௌனியாய் இருந்ததோடல்லாமல், அச்செயல்களை நியாயப்படுத்தும் நோக்கில் செயல்பட்டன. இப்போது ஒரே முறை வலதுசாரிகள் அதே போல் வன்முறையில் ஈடுபட்டவுடன், எதோ நடைபெறாத விஷயம் நடந்துவிட்டதைப்போல, பூமிக்கும் வானுக்கும் குதிக்கிறார்கள். யார் செய்தாலும் வன்முறை தவறுதான். ஆனால், அதை பற்றிய கண்ணோட்டத்தில் தான் இடதுசாரிகளின் தவறு நிகழ்கிறது. இதில் இந்திய இடதுசாரிகள் ஒருபடிமேல் போயி, கருத்து சுதந்திரம் ஏன் எல்லோருக்கும் எப்போதும் கொடுக்கமுடியாது என்பது பற்றி விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள் அதாவது, இவ்வளவு நாள், இவர்கள் எதிர்த்துக்கொண்டிருந்த FACEBOOK மற்றும் ட்விட்டர் இப்போது டிரம்ப் ஐ ப்ளாக் செய்ததால், மிக வேண்டப்பட்டவர் ஆகிவிட்டார்கள். ஒரு ஜனாதிபதியின் கருத்து சுதந்திரத்தையே பறிக்கும் அளவுக்கு தெனாவட்டு உள்ளவர்கள் நாளை இந்த உலகில் உள்ள சாதாரண குடிமகன்களை எப்படி கையாள்வார்கள் என நினைத்தாலே குலை நடுங்குகிறது. இந்த லட்சணத்தில் இதுவரை இவர்கள் கருத்து சுதந்திரம் பற்றி பேசி வந்திருப்பதை திரும்பி பார்த்தால் சிரிப்புதான் வரும். ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. இவர்களுக்கு எதிரி அளவுக்கு கொள்கைகள் முக்கியம் அல்ல. யுத்தத்தில் இருக்கும் போர் வீரனைப்போல, எதிரியை கவிழ்க்க எதைவேண்டுமானாலும் செய்ய தயாரானவர்கள். இவர்களிடம் நியாய தர்மங்கள் எதிர்பார்க்கமுடியாது. இவர்களை வெல்ல வலதுசாரிகள் மேற்கொள்ளவேண்டிய அணுகுமுறை இடதுசாரிகலின் செயல்களை அப்படியே பின்பற்றவேண்டியதுதான். அவர்களின் பிரதிபலிப்பை அவர்களுக்கு காட்டிக்கொண்டே இருந்தால் தான், அவர்களை ஓரளவாவது கட்டுக்குள் அடக்கி வைக்க முடியும். ஆட்சி அதிகாரம் அவர்கள் கையில் கிடைத்தால், ஸ்டாலின்,லெனின்,மாவோ,பொல்பொட் போன்றவர்களின் ஆட்சியில் கோடிக்கணக்கானவர்கள் கொன்று குவிக்கப்பட்டதை போல், மீண்டும் அதே கொடுமை நிகழ எல்லா வாய்ப்புகளும் இன்றும் இருக்கின்றன. சரித்திரம் திரும்பும் என்பார்கள். ஆனால், அது திரும்புவதும் திரும்பாததும், இன்று அதிர்ஷ்டவசமாக ஜனநாயகம் இருப்பதால், மக்கள் கையில்தான் இருக்கிறது.
Rate this:
Balaji - Chennai,இந்தியா
13-ஜன-202116:53:57 IST Report Abuse
Balajiஉண்மை.. அவர்களே அந்த கேபிடல் ஹில் போராட்டம் செய்யும் போது, இதை செய்வதே அராஜகப்போராட்டம் செய்வது எவ்வளவு தூரம் அனைவரையும் பாதிக்கும் என்பதை காட்டாத்தான் என்று கூறித்தான் செய்தார்கள்... இதெல்லாம் பரவலாக சென்று சேராத விஷயமாக ஆகிவிடுகிறது... கடந்த ஒருவருடத்திற்கும் மேலாகவே அமெரிக்காவை போராட்ட விளிம்பிலேயே வைத்திருந்தனர் இடதுசாரிகள்.. இதுவே உண்மை......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X