புதுச்சேரி : முதலியார்பேட்டை தொகுதியில் உள்ள விடுதலை நகர் நீர்தேக்க தொட்டியிலிருந்து கடலுார் சாலை வழியாக ரோடியர் மில் வீதி வரை ரூ. 30 லட்சம் மதிப்பில் புதிய பைப் லைன் அமைக்கப்பட உள்ளது.
இதற்கான பூமி பூஜையை பாஸ்கர் எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார். இதன் மூலம் முதலியார் பேட்டை தொகுதியில் உள்ள விடுதலை நகர், பிராமினாள் வீதி, வெள்ளாழ வீதி, ஜெகதாம்பாள் தோட்டம், பழைய மார்க்கெட் வீதி, ஆண்டியான் தோப்பு, வன்னியப் பெருமாள் கோயில் வீதி, போலீஸ் சந்து, போலீஸ் திட்டு, சாமிநாதபிள்ளை வீதி, பூந்தோட்ட வீதி, ராமலிங்கபுரம் வீதி, வைத்திலிங்கம் செட்டி தெரு, பட்டம்மாள் நகர், கருமார வீதி, மொட்டையப் படையாட்சி வீதி, மாங்காளியம்மன் கோயில் வீதிகளில் சீரான அழுத்தத்தில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்கும்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் சண்முகவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE