புதுச்சேரி : இந்திரா சிக்னல் - வில்லியனுார் வரை சாலை விரிவாக்கம் பணிக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும் என பொதுமக்கள் ஏக்கமடைந்துள்ளனர்.
புதுச்சேரியில் அதிகரித்துள்ள வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம் செய்யவில்லை. புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ் சாலையில் தினமும் பல ஆயிரம் வாகனங்கள் செல்கின்றன.சாலை அகலம் குறைவு, வாகன அதிகரிப்பு காரணமாக, இந்திரா சிக்னலில் இருந்து வில்லியனுார் வரை அதிக விபத்துக்கள் நடந்ததால் ரெட்டியார் பாளையத்தில் இருந்து மூலக்குளம் வரை சாலை நடுவே டிவைடர் அமைத்துள்ளனர். ஆனாலும் விபத்துக்கள் குறையவில்லை.உழவர்கரை நகராட்சி, பொதுப்பணித்துறை இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றன.
அரசியல் தலையீடு காரணமாக, பல இடங்களில் முழுமையாக ஆக்கிரமிப்பு அகற்றப் படவில்லை. இதுவும் சாலை விபத்துக்கு காரணமாக அமைகிறது.கடந்த 10 ஆண்டுகளாக ஒவ்வொரு சட்டசபை கூட்டத்திலும், புதுச்சேரி விழுப்புரம் நெடுஞ் சாலை விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிப்பு வரும். ஆனால் விரிவாக்கத்திற்கு ஆயத்த பணிகள் கூட நடக்கவில்லை.அருகிலுள்ள தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி முதல் கனகசெட்டிக்குளம் வரை கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணி குறுக்கீடுகளின்றி விரைவாக நடந்தது. புதுச்சேரியில் சிறிய தெருவை கூட விரிவாக்கம் செய்ய முடியவில்லை.
மக்களின் உயிர் சார்ந்த விஷயத்தில், அரசு மெத்தனம் காட்டாமல் விரிவாக்க பணியை துவக்க வேண்டும்.புதுச்சேரி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, குறுக்கீடுகளின்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE