புதுச்சேரி : முருங்கப்பாக்கத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை கிடப்பில் போட்டதை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தினர்.
முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் வீதி, குயவர் வீதி ஆகிய வீதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளன. இந்த இரண்டு வீதிகளையும் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் சிமெண்ட் சாலையாக மாற்றும் பணியை கடந்த 2018ம் ஆண்டில் குடிசை மாற்று வாரியம் துவக்கியது.தார் சாலையை பெயர்த்து சாலையின் இரு புறமும் சைடு வாய்க்கால் கட்டப்பட்டது. திரவுபதியம்மன் கோவில் வீதியில் மட்டும் பாதியளவு சிமெண்ட் சாலை அமைத்தனர். அதன் பிறகு பணி கிடப்பில் போடப்பட்டது.
பணியை முடிக்குமாறு அப்பகுதி மக்கள் குடிசை மாற்று வாரியம், புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.பணிகள் துவங்காததால் சாலை குண்டும் குழியுமாக மாறி, மழையால் சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் நேற்று வீடுகளில் கருப்பு கொடியேற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.காலம் கடத்தாமல் சாலை அமைக்கும் பணியை துவக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE