புதுச்சேரி : சம்பளம் வழங்கக் கோரி கதர் வாரிய ஊழியர்கள் தொழில்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி கதர் வாரியத்தில் 219 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கதர் வாரியத்திற்கு நடப்பு நிதியாண்டிற்கு ரூ. 3.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கதர் வாரிய ஊழியர்களுக்கு கடந்த 12 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.துறைக்கு ஒதுக்கிய நிதி இருந்தும், சம்பளம் வழங்க மறுக்கும் அதிகாரிகளை கண்டித்து, தட்டாஞ்சாவடியில் உள்ள தொழில்துறை கூடுதல் செயலர் அலுவலகத்தை கதர்வாரிய ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சம்பளம் வழங்கும் வரை போராட்டம் தொடரும் என கதர் வாரிய ஊழியர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE