யாசின் மாலிக் மீது குற்றப்பத்திரிகை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
ஜம்மு:மறைந்த மத்திய அமைச்சர் முப்தி முகமது சயீது மகளை கடத்திய வழக்கில், ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மீது, பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கடந்த, 1989ல், வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில், உள்துறை அமைச்சராக இருந்தவர், முப்தி முகமது சயீது; இவரது இளைய மகள்,ருபய்யா சயீதை, யாசின் மாலிக்

ஜம்மு:மறைந்த மத்திய அமைச்சர் முப்தி முகமது சயீது மகளை கடத்திய வழக்கில், ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மீது, பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கடந்த, 1989ல், வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசில், உள்துறை அமைச்சராக இருந்தவர், முப்தி முகமது சயீது; இவரது இளைய மகள்,ருபய்யா சயீதை, யாசின் மாலிக் தலைமையிலான கும்பல் கடத்திச் சென்றது. அவரை விடுவிக்க வேண்டுமெனில், சிறையில் உள்ள தங்கள் கூட்டாளிகள், 13 பேரை விடுதலை செய்ய வேண்டும் என, நிபந்தனை விதித்தது.

இதையடுத்து, அவர்களை, ஜம்மு - காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, விடுதலை செய்து, ருபய்யா சயீதை மீட்டார். இந்நிலையில், 31 ஆண்டுகள் கழித்து, தற்போது, யாசின் மாலிக் உள்ளிட்ட, 10 பேர் மீது, சி.பி.ஐ., தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, பயங்கரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.

அப்போது, ''குற்றம் சாட்டப்பட்டோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், யாசின் மாலிக் மீதான குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளன,''என, நீதிபதி சுனித் குப்தா தெரிவித்தார். குற்றப்பத்திரிகையில், 20க்கும் மேற்பட்டோர், ருபய்யா சயீதை கடத்த சதி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், இருவர் இறந்து விட்டனர். 12 பேர் தலைமறைவாக உள்ளனர்.

மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், அம்மாநில முன்னாள் முதல்வருமான, மெஹபூபா முப்தியின் சகோதரி ருபய்யா சயீது. இவரை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, யாசின் மாலிக், தற்போது டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X