திண்டிவனம் : ''பொது மக்கள் ஒத்துழைத்தால், கிராமத்திலுள்ள பிரச்னைகள் தீர்ந்துவிடும்'' என ஐ.ஜி., நாகராஜன் பேசினார்.
திண்டிவனம் அடுத்த சலவாதி கிராமத்தில், ரோஷணை போலீசார் சார்பில், கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் அறிமுக கூட்டம் நடந்தது.கூட்டத்தில், சலவாதி கிராமத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலரை அறிமுகம் செய்து வைத்து, வடக்கு மண்டல ஐ.ஜி.,நாகராஜன் பேசுகையில், ''கிராம மக்களுடன் போலீசார் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கத்தில்தான், இந்த கிராமத்திற்கு தனியாக காவலர் நியமிக்கப்பட்டுள்ளார்.காவலரிடம் கிராமத்திலுள்ள பிரச்னை பற்றி கூறினால், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் நேரில் வந்து விசாரணை நடத்துவார்கள்.
இதன் மூலம் பொதுமக்களுக்கும் போலீசிற்கும் இடையே நல்லுறவு ஏற்படும். கிராமத்தில் சட்டத்திற்கு புறம்பாக யாராவது கஞ்சா, குட்கா, சாராயம், ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்டவை களில் ஈடுபட்டால் போலீசாரிடம் தகவல் சொல்லுங்கள். கிராம காவலரிடம் பொது மக்கள் ஒத்துழைத்தால், கிராமத்திலுள்ள பிரச்னைகள் தீர்ந்துவிடும்' என்றார்.கூட்டத்தில் எஸ்.பி., ராதாகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி., தேவநாதன், டி.எஸ்.பி., கணேசன், ரோஷணை இன்ஸ்பெக்டர் வள்ளி, சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ், தனிப்பிரிவு சப்இன்ஸ்பெக்டர் சுகுமார், திண்டிவனம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் சேகர், அ.தி.மு.க., பாசறை மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE