அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் அரசியல் மாற்றம் : ஈரோட்டில் கமல் பேச்சு

Updated : ஜன 14, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஈரோடு : ''தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என உங்களைப்போல நானும் கூறுகிறேன். அதற்காக உங்களது தொண்டனாக செயலாற்றுகிறேன்'' என மக்கள் நீதி மைய தலைவர் கமல் பேசினார்.ஈரோட்டில் மக்கள், வணிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு நகரமும் தலைநகருக்கு நிகரானதாக மாற வேண்டும். சென்னையில் தான் தொழில் முனைவோராக முடியும் என்பதை மாற்றி இருக்கும்
தமிழகம், அரசியல் மாற்றம், ஈரோடு, கமல், கமல்ஹாசன், பேச்சு

ஈரோடு : ''தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என உங்களைப்போல நானும் கூறுகிறேன். அதற்காக உங்களது தொண்டனாக செயலாற்றுகிறேன்'' என மக்கள் நீதி மைய தலைவர் கமல் பேசினார்.

ஈரோட்டில் மக்கள், வணிகர்கள் சந்திப்பு கூட்டத்தில் அவர் பேசியதாவது: ஒவ்வொரு நகரமும் தலைநகருக்கு நிகரானதாக மாற வேண்டும். சென்னையில் தான் தொழில் முனைவோராக முடியும் என்பதை மாற்றி இருக்கும் இடத்தில் தொழில்களை செய்யும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு நாம் 'நேர்மையான அரசியல் செய்வேன்' எனக்கூறும் துணிச்சல் வேண்டும்.செயல்முறைகளின் ஆதாரங்களை வாக்குறுதியாக பேசுகிறோம். அதனால்தான் எங்களது முதல் கொள்கையாக நேர்மையை ஏற்றுள்ளோம். இருந்தும் எங்கள் கட்சியின் கொள்கை தயாராகி வருகிறது.

நம் தலைமுறை வீதிகளின் சாக்கடையில் வாழ்வதை பார்க்க முடிகிறது. அடுத்த தலைமுறைக்காவது மாற்றம் வர வேண்டும். மக்கள் வீட்டிலிருந்தபடி லேப்டாப்பில் விண்ணப்பங்களை அனுப்பி பலன் பெற வேண்டும். அதற்காக மடிக்கு ஒரு கணினி இலவசமாக வழங்க இயலாது. குடும்பத்துக்கு ஒன்றாக வழங்கி தேவை நிறைவேற்ற செய்வோம்.

படித்து வேலை இல்லை என்ற நிலைக்கு மாற்றாக திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கி அவர்களே வேலை வழங்கும் நிலைக்கு உயர்த்துவோம். அனைவரும் கூடி தேர் இழுப்போம். வடமாக நானிருப்பேன். உங்கள் நேர்மையான இழுப்புக்கெல்லாம் நான் வருவேன், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-ஜன-202119:23:14 IST Report Abuse
Malick Raja மாற்றம் நிச்சயம் இருக்கும் .. ஆனால் நீதிமையம் அந்தவிளையாட்டில் இல்லை . அதுதுதான் உண்மையும் கூட . சொல்லிடுங்க கமல் அவர்களே ...
Rate this:
Cancel
13-ஜன-202117:27:45 IST Report Abuse
ஆப்பு தமுழகத்தில் அரசியல் மாற்றம் தான். ஆட்சி மாற்றம் இல்லை. அதாவது யார் ஆட்சிக்கு வந்தாலும் அதே இலவசங்கள், கொள்ளை தொடரும்.
Rate this:
Cancel
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
13-ஜன-202117:05:32 IST Report Abuse
Chakkaravarthi Sk பிஜேபி தனியாக தேர்தலை சந்தித்தால் நிச்சயம் ஒரு தொகுதியில் கூட டெபாசிட் தேறாது சார். ஏன் இந்த வீண் வம்பு. யாரோடோனோ ஒட்டி கொண்டு தான் தேர்தலில் நிற்க முடியும். ரஜினி வந்தால் பார்த்துக்கொள்ளலாம் என்று கனவு (இலவு காத்த கிளி போல) கண்டு கொண்டு இருந்தார்கள். இப்பொழுது அவர் வர மாட்டேன் என்றுசண்டித்தனம் செய்ததால் வேறு வழியின்றி கொடுத்த தொகுதிகளை பெற்றுக்கொண்டு தேர்தலில் நிற்க வேண்டியது தான் தமிழக பிஜேபியின் நிலை. உண்மை சுடும். ஆனாலும் அது உண்மையன்றோ. கனவு காண சொல்லி பலர் புத்தகம் எழுதியுள்ளார்கள். ஆனால் நடக்கக்கூடியதாக இருந்தால் கனவு நிறைவேறும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X