சென்னை :''தி.மு.க., கூட்டணி இன்னமும் முடிவாகவில்லை. அங்கு, முதல்வர் வேட்பாளர் யார் என தெரியவில்லை. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி பங்கேற்கும் கூட்டங்களில் 'வருங்கால முதல்வரே' என்கின்றனர்'' என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
அவரது பேட்டி:சென்னை மதுரவாயலில் நாளை நடக்கும் பொங்கல் விழாவில், தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்கிறார். மதுரை புறநகர் மாவட்ட தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு அலுவலகம் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். தேச விரோத கும்பல், பயங்கரவாதிகள் மீது, தமிழக காவல் துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சட்டசபை தேர்தலுக்கு, பா.ஜ., தயாராகி வருகிறது.
ஜன.18 முதல் 25ம் தேதி வரை, ஓட்டுச்சாவடிகளில், 25 பேர் குழு அமைக்கும் பணி நடக்கிறது. நுாறு நாட்களில், 10 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கும், சிறப்பு திட்டத்தையும் துவக்க உள்ளோம். தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி. வரும் தேர்தலில், ஆட்சியை பிடிக்கும் கூட்டணி.தேசிய அளவில் இட ஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம். பா.ம.க., நிறுவனர் முன்வைத்துள்ள கோரிக்கையை, அரசு பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது. அரசு எடுக்கும் முடிவை ஏற்போம்.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE