ரிஷிவந்தியம் : ஆதிதிருவரங்கம் அரங்கநாதபெருமாள் கோவிலில் நாளை சொர்க்கவாசல் மூடப்படுகிறது.
ரிஷிவந்தியம் அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தில் பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. தமிழகத்திலேயே மிகபெரிய அளவிலான நவபாஷனத்தால் உருவாக்கப்பட்ட அரங்கநாத பெருமாள் சயனநிலையில் மூலவராக அருள்பாலிக்கிறார். மன்னர்காலத்தில் கருங்கற்கலால் கட்டப்பட்ட இக்கோவில், திருமணம், உத்தியோகம், குழந்தைபாக்கியத்திற்கு புன்னிய ஸ்தலமாக உள்ளது.
வைகுண்ட ஏகாகதசியை யொட்டி கடந்த டிசம்பர் மாதம் 25ம் தேதி நடந்த சொர்க்கவாசல் திறப்பு விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் நாளை 14ம் தேதி (வியாழன் கிழமை) சொர்க்கவாசல் மூடப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE