செஞ்சி : பொங்கல் பண்டிகை விற்பனைக்காக கர்நாடகவில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த சோ.குப்பம் கிராமத்தில் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்து பதுக்கி வைத்திருப்பதாக நேற்று காலை சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், சத்தியமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமி மற்றும் போலீசார் சோ.குப்பம் கிராமத்தில் சோதனை நடத்தினர். இதில் வீரமுத்து,57; வீட்டில் பதுக்கி வைத்திருந்த 698 குவாட்டர் மதுபாட்டில்களை கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.மதுபாட்டில்களை பதுக்கி வைத்திரந்த வீரமுத்து, அவரது கூட்டாளி அய்யாதுரை,60; ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான வீரமுத்துவின் மகன் கண்ணதாசனை தேடி வருகின்றனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசாரை டி.எஸ்.பி., இளங்கோவன் பாராட்டினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE