சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர் படகில் சுற்றுலா பயணிகள் சப் கலெக்டர் எச்சரிக்கை

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மீனவர் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் எச்சரித்துள்ளார். சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தனியார் மீனவர் படகு மூலம் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலா பயணிகளை

சிதம்பரம் : சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் மீனவர் படகில் சுற்றுலா பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சப் கலெக்டர் எச்சரித்துள்ளார்.

சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் தனியார் மீனவர் படகு மூலம் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.கடந்த அக்டோபர் மாதம் சுற்றுலா பயணிகளை அனுமதியின்றி மீனவர் படகில் ஏற்றிச் சென்ற 8 மீனவர்கள் மீது ஆர்.டி.ஓ., கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.அவர்கள் நேற்று விசாரணைக்காக சிதம்பரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் ஆஜராயினர். சப் கலெக்டர் மதுபாலன் தலைமையில் விசாரணை நடந்தது.
அப்போது சப் கலெக்டர், மீனவர்களிடம், அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு ஆற்றில் செல்லும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு. பாதுகாப்பில்லாத இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. மீண்டும் புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X