சென்னை:''தி.மு.க.,வில், முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா, உதயநிதியா, கனிமொழியா என்ற, குழப்பம் உள்ளது,'' என, தமிழக பா.ஜ., தலைவர் முருகன் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:தமிழக பா.ஜ., சார்பில், 9, 10ம் தேதிகளில், தமிழகம் முழுதும், 'நம்ம ஊரு பொங்கல்' என்ற பெயரில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. நாளை, சென்னை மதுரவாயலில் நடக்கும் பொங்கல் விழாவில், தேசிய தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்.கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு, இடைத்தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க, பா.ஜ., தயாராக உள்ளது.
இடைத்தேர்தல் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது. வெற்றிவேல் யாத்திரை, தடையை மீறி நடத்தப்பட்டது.இதன் முக்கிய கோரிக்கையான, தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை ஏற்று, முதல்வர் அறிவித்துள்ளார்; அவருக்கு நன்றி.தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளது. முதல்வர் வேட்பாளர் குறித்து, அ.தி.மு.க., எடுத்த முடிவு ஏற்கப்படும். எங்கள் கூட்டணி வலுவான கூட்டணி.
வரும் தேர்தலில், ஆட்சியை பிடிக்கும் கூட்டணி. தி.மு.க., கூட்டணி இன்னமும் முடிவாக வில்லை. அங்கு, முதல்வர் வேட்பாளர் ஸ்டாலினா, உதயநிதியா, கனிமொழியா என்பது தெரியவில்லை. உதயநிதி பங்கேற்கும் கூட்டங்களில், 'வருங்கால முதல்வரே' என, கோஷமிடுகின்றனர். கனிமொழி கூட்டத்திலும், 'வருங்கால முதல்வரே' என்கின்றனர். இவ்வாறு, முருகன் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE