அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., நினைவிடத்தில் முதல்வர் ஆய்வு

Added : ஜன 12, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை:சென்னை, மெரினா கடற்கரையில் நடந்து வரும், ஜெ., நினைவிட கட்டுமான பணிகளை, முதல்வர் பழனிசாமி., ஆய்வு செய்தார்.மறைந்த ஜெயலலிதாவிற்கு, தமிழக அரசு சார்பில், 79.75 கோடி ரூபாய் மதிப்பில், 'பீனிக்ஸ் பறவை' வடிவில், நினைவிடம் அமைக்கப்படுகிறது.இந்நிதியில், எம்.ஜி.ஆர்., நினைவிடமும் புதுப்பிக்கப்படுகிறது. விரைவில் பணிகளை முடித்து, அடுத்த மாதம் திறப்பு விழா நடத்த, அரசு முடிவு
 ஜெ., நினைவிடத்தில்   முதல்வர் ஆய்வு

சென்னை:சென்னை, மெரினா கடற்கரையில் நடந்து வரும், ஜெ., நினைவிட கட்டுமான பணிகளை, முதல்வர் பழனிசாமி., ஆய்வு செய்தார்.

மறைந்த ஜெயலலிதாவிற்கு, தமிழக அரசு சார்பில், 79.75 கோடி ரூபாய் மதிப்பில், 'பீனிக்ஸ் பறவை' வடிவில், நினைவிடம் அமைக்கப்படுகிறது.இந்நிதியில், எம்.ஜி.ஆர்., நினைவிடமும் புதுப்பிக்கப்படுகிறது. விரைவில் பணிகளை முடித்து, அடுத்த மாதம் திறப்பு விழா நடத்த, அரசு முடிவு செய்துள்ளது.முதல்வர் பழனிசாமி., ஜெ., நினைவிடம் சென்றார். அங்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

அதன்பின், கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். அவருடன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், தலைமை செயலர் சண்முகம், பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் சென்றனர்.பொதுப்பணித் துறை அதிகாரிகள், ஜெ., நினைவிடம் கட்டுமானப் பணிகள் குறித்த விபரங்களை, முதல்வருக்கு தெரிவித்தனர். பணிகளை விரைவாக முடிக்கும்படி, முதல்வர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas - Chennai,இந்தியா
13-ஜன-202111:21:35 IST Report Abuse
Srinivas எங்கே தர்மயுத்தம் செய்தவர்? மறுபடியும் தர்மயுத்தம் செய்கிறாரா? சிறையிலிருந்து வரவேண்டி மறுபடியும் தர்மயுத்தம் செய்தாலும் செய்வார். சுதந்திர போராட்டத்தில் பங்குகொண்டவர்கள்...
Rate this:
Cancel
S. Rajan - Auckland,நியூ சிலாந்து
13-ஜன-202107:31:56 IST Report Abuse
S. Rajan ஊரார் வீடு நெய்யே என் பெண்டாட்டி கையே. வரிப்பணத்தை எடுத்து ஊழல் தண்டனை கிடைத்தவருக்கு மண்டபம். ஏன் ஆ தி மு க பணத்தில் செய்யக்கூடாது? ஏனென்றால் மக்கள் இன்னும் இவர்களுக்கு ஒட்டு போடுவதால்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
13-ஜன-202111:25:21 IST Report Abuse
Srinivasஊழல் புர்ச்சி தலவி உலகப்புகழ் அல்லவா...அதனால்தான் மக்கள் வரிப்பணத்தில் அடிமைகள் செய்யும் ''நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் சேவை''...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜன-202117:26:48 IST Report Abuse
Malick Rajaதன்மானமில்லாதவர்கள், சுயமரியாதை இழந்தவர்களுக்கு இதெல்லாம் வாழத்துக்களாகவே கருதினால் மட்டுமே அவர்களின் நிலையை தொடரமுடியும் என்பது உண்மையல்லவா ?...
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-202102:45:15 IST Report Abuse
தமிழவேல் தேவைதான், ஒரு குற்றவாளிக்கு நினைவிடமும், கொலையாளிக்கு கோவில் கட்டுவதும் இந்த நாட்டில் மட்டுமே நடக்கும்.
Rate this:
Srinivas - Chennai,இந்தியா
13-ஜன-202111:27:23 IST Report Abuse
Srinivas///ஒரு குற்றவாளிக்கு நினைவிடமும்/// பின்னால் வரும் சமுதாயம் இவர் யார் என்று தெரிந்துகொள்ள ''நினைவு மண்டபம்'' உதவியாக இருக்கும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X