சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் அபேஸ்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
செஞ்சி : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர். செஞ்சி பீரங்கி மேடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமு மகன் சரவணன்,45; இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு திருவம்பட்டு கிராமத்தில் நடந்த ஈமச்சடங்கிற்கு மனைவியுடன் சென்று இருந்தார். வீட்டில் இவரது மகள் இருந்தார். மகள் மாலை 4.30 மணிக்கு

செஞ்சி : பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 5 சவரன் நகை மற்றும் ரூ. 25 ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

செஞ்சி பீரங்கி மேடு திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ராமு மகன் சரவணன்,45; இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணிக்கு திருவம்பட்டு கிராமத்தில் நடந்த ஈமச்சடங்கிற்கு மனைவியுடன் சென்று இருந்தார். வீட்டில் இவரது மகள் இருந்தார். மகள் மாலை 4.30 மணிக்கு நாட்டிய வகுப்பிற்கு சென்றுவிட்டார். இரவு 7.30 மணிக்கு சரவணன் வீட்டிற்கு வந்தபோது, பின்பக்க கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த இரண்டரை சவரன் நெக்லஸ், 2 சவரன் செயின், 2 மோதிரங்கள் என 5 சவரன் தங்க நகைகள், 2 செட் வெள்ளி கொலுசு மற்றும் ரொக்கம் ரூ. 25 ஆயிரம் திருடு போயிருந்தது.புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X