ரிஷிவந்தியம் : பொங்கல் பண்டிகையையொட்டி அத்தியூர் வாரச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடு விற்பனை நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை சந்தை நடைபெறும். இதையொட்டி செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணியளவில் திருவண்ணாமலை, விழுப்புரம், ஆத்துார் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக அத்தியூர் வாரச்சந்தைக்கு வருவர். சாதாரண நாட்களில் பல லட்ச ரூபாய் வர்த்தகம் நடைபெறும்.தற்போது, பொங்கல் பண்டிகை என்பதால் ஆடு விற்பனை நேற்று களைகட்டியது.
பொதுமக்கள், இறைச்சி கடைக்காரர்கள் ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றதால், விலையும் அதிகமாக இருந்தது. குறிப்பாக, பறவை காய்ச்சல் குறித்த அச்சத்தினால் அசைவபிரியர்கள் கோழி கறி உண்பதை தவிர்த்துள்ளனர். இதனால் ஆட்டிற்கு நல்ல கிராக்கி ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த வாரச்சந்தையில் 1 கோடி ரூபாய்க்கு மேல் ஆடு விற்பனை நடந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE