பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் அடுத்தடுத்து பயன்பாட்டுக்கு வர உள்ள 4 தடுப்பூசிகள்!

Updated : ஜன 12, 2021 | Added : ஜன 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புது டில்லி: சைடஸ் கேடில்லா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி, பையாலஜிக்கல் இ மற்றும் ஜெனோவா ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவின் ஒப்புதலுக்காக வரிசையில் இருப்பதாக மத்திய சுகாதார செயலர் கூறினார்.சைடஸ் கேடில்லா தடுப்பூசியின் 2-ம் கட்டம் மருத்துவ பரிசோதனைகள் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. தற்போது 3-ம் கட்ட பரிசோதனைகளுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது. இதேபோல், ரஷ்யாவின்

புது டில்லி: சைடஸ் கேடில்லா, ரஷ்யாவின் ஸ்புட்னிக் - வி, பையாலஜிக்கல் இ மற்றும் ஜெனோவா ஆகிய தடுப்பூசிகள் இந்தியாவின் ஒப்புதலுக்காக வரிசையில் இருப்பதாக மத்திய சுகாதார செயலர் கூறினார்.



latest tamil news



சைடஸ் கேடில்லா தடுப்பூசியின் 2-ம் கட்டம் மருத்துவ பரிசோதனைகள் கடந்த ஆண்டு டிசம்பரில் நிறைவடைந்தது. தற்போது 3-ம் கட்ட பரிசோதனைகளுக்கு ஒப்புதல் பெற்றுள்ளது. இதேபோல், ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-ம் கட்ட பரிசோதனைகளும் நிறைவடைந்து, மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்தியாவின் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரி நிறுவனத்துடன் இணைந்து ரஷ்ய நிறுவனம் இச்சோதனை மேற்கொண்டுள்ளது. பையாலஜிக்கல் இ நிறுவனம் மற்றும் ஆர்.என்.ஏ வகை தடுப்பூசி தயாரித்துள்ள ஜெனோவா நிறுவனம் ஆகிய இரண்டும் மார்ச் மாதத்தில் 2-ம் கட்ட பரிசோதனைகளை தொடங்க உள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறியதாவது: கொரோனா சூழ்நிலை உலகளவில் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. இந்தியாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இப்போது 2,16,558 பேர் சிகிச்சையில் உள்ளனர். உறுதிசெய்யப்பட்ட தொற்றுகளில் இது 2% ஆகும். கடந்த வாரம் இறப்பு விகிதம் 1.2 சதவீதமாக இருந்தது. இந்தியாவில் கேரளா (63,000) மற்றும் மஹாராஷ்டிராவில் (53,000) ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.


latest tamil news



கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை நிரூபித்துள்ளன. தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. தடுப்பூசி கிடைப்பதை பொறுத்து இது தொடர்ச்சியானதாக அமையும். இரண்டு டோஸ்களுக்கு இடையில் 28 நாட்கள் இடைவெளி உள்ளது. இரண்டாவது டோஸ் பெற்ற 14 நாட்களுக்குப் பிறகு மருந்தின் செயல்திறன் தொடங்கும். மருந்து கட்டுப்பாட்டாளர்கள் மேலும் நான்கு தடுப்பூசியை வரும் நாட்களில் எதிர்பார்க்கிறார்கள். என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஜன-202107:54:53 IST Report Abuse
ஆப்பு தலைவலிக்கு அனாசின், ஆஸ்ப்ரோ, சாரிடான், டோலோ 650 மாதிரி கொரோனாவுக்கு ஏகப்பட்ட தடுப்பூசிகள். கொரொனா போயே போச்சு.
Rate this:
Cancel
கும்புடுறேன் சாமி - பன்னிமடை கோவை,இந்தியா
13-ஜன-202104:39:05 IST Report Abuse
கும்புடுறேன் சாமி ஊர்ல இருக்குற எல்லா தடுப்பூசியும் இந்தியால கிடைக்குது , உலகத்தின் தடுப்பூசி கள்ள மார்க்கட்டாக இந்தியா மாறப்போகுது
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஜன-202107:57:26 IST Report Abuse
 Muruga Velஉங்களுக்கு வேற ஊசி போடணும்...
Rate this:
sriram - Chennai,இந்தியா
13-ஜன-202113:16:15 IST Report Abuse
sriramகும்புடுறேன் சாமி அவர்களே, உலகத்தில் உள்ள எல்லா தடுப்பூசிகளில் 70% இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா. அது மட்டுமல்ல, தடுப்பூசியின் விலை உலகின் மற்ற நாடுகளை விட இந்தியாவில் 90% வரை குறைவு....
Rate this:
Anand - chennai,இந்தியா
13-ஜன-202115:06:04 IST Report Abuse
Anandகும்புடுறேன் சாமி கூட்டத்தினர் எடுத்த முடிவின் படி, வாங்கின காசுக்கு மோடியை எதிர்க்கவேண்டும் மற்றபடி தடுப்பூசிகள் அதில் இந்தியாவின் பங்கு என்ன என்பதைப்பற்றி தெரியாது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X