பொது செய்தி

தமிழ்நாடு

10 நாட்களில் வீடுகள் அகற்ற திட்டம்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம், : வேகவதி ஆறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க, 'பயோமெட்ரிக்' பதிவு, பொதுப்பணித் துறை அலுவலகத்தில் துவங்கி உள்ளது. பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரை ஒட்டி பாய்ந்து, மீண்டும் பாலாற்றிலேயே கலக்கிறது.பொதுப்பணித்துறை கணக்கெடுப்பின்படி, 1,400க்கும் மேற்பட்ட வீடுகள், வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்து

காஞ்சிபுரம், : வேகவதி ஆறு ஆக்கிரமிப்பாளர்களுக்கு, குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க, 'பயோமெட்ரிக்' பதிவு, பொதுப்பணித் துறை அலுவலகத்தில் துவங்கி உள்ளது.

பாலாற்றின் கிளை ஆறான வேகவதி ஆறு, காஞ்சிபுரம் நகரை ஒட்டி பாய்ந்து, மீண்டும் பாலாற்றிலேயே கலக்கிறது.பொதுப்பணித்துறை கணக்கெடுப்பின்படி, 1,400க்கும் மேற்பட்ட வீடுகள், வேகவதி ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன.கடந்த, 2015ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, இந்த ஆக்கிரமிப்பு வீடுகள் கடும் சேதமாயின. இதனால், ஆக்கிரமிப்பு செய்துள்ள வீடுகளை முற்றிலுமாக அகற்ற, மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் வழங்க, முதற்கட்டமாக, கீழ்கதிர்பூரில், 200 கோடி ரூபாய் மதிப்பில், 2,112 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.இரு ஆண்டுகளாக நடந்த கட்டட பணி, கடந்தாண்டு முடிந்தது. ஆக்கிரமிப்பு வீடுகளை முற்றிலுமாக அகற்ற, முதற்கட்டமாக, ஆக்கிரமிப்பாளர்களுக்கு, 'பயோமெட்ரிக்' அட்டை வழங்கப்பட உள்ளது.இதற்காக பதிவு செய்யும் பணிகள், காஞ்சிபுரம் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.'பயோமெட்ரிக்' அட்டை வழங்கும் பணிகள், அடுத்த, 10 நாட்களில் முடிந்தவுடன், வேகவதி ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்ற, பொதுப்பணித் துறை முடிவு செய்துள்ளன.

ஆக்கிரமிப்பாளர்களுக்கு வழங்கப்பட உள்ள வீடுகள், 400 சதுரடி, 17 லட்சம் ரூபாய் மதிப்புடையது என, குடிசை மாற்று வாரியம் தெரிவித்துள்ளது.ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள், 1.5 லட்சம் ரூபாய் மட்டும் வழங்கினால் போதுமானது என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X