சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்களிடம் ஆபாச கேள்வி 'யு டியூப்' அடாவடிகள் மூவர் கைது

Added : ஜன 12, 2021
Share
Advertisement
சாஸ்திரி நகர் : பெசன்ட் நகர் கடற்கரை சென்ற பெண்களிடம், ஆபாசமாக கேள்வி கேட்டு, பதில் கூற மறுத்த பெண்களை துரத்தி சென்று படம்பிடித்து ஒளிபரப்பிய, 'சென்னை டாக்' யு டியூப் சேனல் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர். பெசன்ட் நகர் கடற்கரையில், 'பொட்டோட்டோ' கடை நடத்தி வருபவர் லட்சுமி, 48. இவர், சாஸ்திரிநகர் போலீசில், நேற்றுமுன்தினம் ஒரு புகார்

சாஸ்திரி நகர் : பெசன்ட் நகர் கடற்கரை சென்ற பெண்களிடம், ஆபாசமாக கேள்வி கேட்டு, பதில் கூற மறுத்த பெண்களை துரத்தி சென்று படம்பிடித்து ஒளிபரப்பிய, 'சென்னை டாக்' யு டியூப் சேனல் உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.

பெசன்ட் நகர் கடற்கரையில், 'பொட்டோட்டோ' கடை நடத்தி வருபவர் லட்சுமி, 48. இவர், சாஸ்திரிநகர் போலீசில், நேற்றுமுன்தினம் ஒரு புகார் அளித்தார்.அதில், கடற்கரைக்கு, என் தங்கையுடன் வரும்போது, 'சென்னை டாக்' என்ற, 'யு டியூப்' சேனலில் இருந்து வந்த மூன்று பேர், மைக் நீட்டி, கடற்கரைக்கு வரும் பெண்களிடம் ஆபாசமான வார்த்தைகளில் கேள்வி கேட்டனர். பதில் கூற மறுத்து, நகர்ந்து சென்ற பெண்களை, துரத்தி சென்று படம் பிடித்து, பதில் வாங்க முயன்றனர். என்னிடமும், அதேபோல் கேள்வி கேட்டனர்.'எனக்கு, உன் அம்மா வயது இருக்கும்; இப்படி எல்லாம் கேள்வி கேட்கலாமா...' என கேட்டேன்.

இதற்கு, மூன்று பேரும் சேர்ந்து என்னை ஆபாசமாக திட்டியதுடன், அவர்கள் கையில் வைத்திருந்த மைக்கால், என்னை தாக்க முயன்றனர். பெண்களை இழிவுப்படுத்தி, அதை வியாபார பொருளாக மாற்றிய மூன்று பேர் மீதும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் குறிப்பிடப்பட்டது.போலீசார் விசாரணையில், திருத்தணியை சேர்ந்த அசேன்பாஷா, 23, பெருங்குடியை சேர்ந்த அஜய்பாபு, 24, தினேஷ்குமார், 31, என தெரிந்தது.தினேஷ்குமார், 2019ம் ஆண்டு, யு டியூப் சேனல் ஆரம்பித்தார். பெண்களிடம், ஆபாச கேள்வி கேட்டு, அவர்கள் கூறும் பதில்களை ஒளிபரப்பி, அதில் பார்வையாளர்களை அதிகரிக்க செய்து, பணம் பார்த்து வந்தனர்.

அஜய்பாபு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும், அசேன்பாஷா, கேமரா மேனாக பணி புரிந்தனர்.மூன்று பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும், அவர்கள் வைத்திருந்த கேமரா, மைக், மூன்று மொபைல் போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X