பொது செய்தி

தமிழ்நாடு

நாளிலே நல்ல நாள் நம்மரபை ஆளும் நாள்

Added : ஜன 12, 2021
Share
Advertisement
நாளிலே நல்ல நாள்நம்மரபை ஆளும் நாள்-ஆளும் தமிழர் நன்மரபைஆளும் இன்பத் திருநாள்சூழும் உறவில் மண்வாசம்சூழும் சீரிய பெருநாள்வாழும் நெறியைக் கற்பித்தேவாழ்விக்கும் வளமையின் வியன்நாள்நாளும் ஒளிரும் கதிரவனாய்நமை நாளுமியக்கும் ஒளிர்நாள்உறவில் அன்பது பொங்கிடவேஉணர்வுக் கனல்மூட்டும் உயர்நாள்அறமாம் பாதை காட்டிடவேஅகத்தில் பூத்த அருள்நாள்மறமாம் வீரத்தை

நாளிலே நல்ல நாள்நம்மரபை ஆளும் நாள்-ஆளும் தமிழர் நன்மரபைஆளும் இன்பத் திருநாள்சூழும் உறவில் மண்வாசம்சூழும் சீரிய பெருநாள்வாழும் நெறியைக் கற்பித்தேவாழ்விக்கும் வளமையின் வியன்நாள்நாளும் ஒளிரும் கதிரவனாய்நமை நாளுமியக்கும் ஒளிர்நாள்உறவில் அன்பது பொங்கிடவேஉணர்வுக் கனல்மூட்டும் உயர்நாள்அறமாம் பாதை காட்டிடவேஅகத்தில் பூத்த அருள்நாள்மறமாம் வீரத்தை மண்மகளும்மாண்புடன் ஈன்ற மகிழ்நாள்திறமாய் இன்பம் சமைத்திடவேகதிர்முகம் திறந்த கவின்நாள்அறிவாம் சுடரை ஏற்றிடவேஆதவன் அருளிய கொடைநாள்நிறைவாய் உலகை நடத்திடவேமேழியர் நெய்ததே தமிழர்திருநாள்.கவிஞர் நா.சியாமளாதமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர்வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகோவை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X