சென்னை : பெசன்ட் நகர் கடற்கரையில், நேற்று அதிகாலை வந்த ஒரு ஆமை, 119 முட்டைகளை இட்டுச் சென்றது.
கடல் ஆமைகள், ஜனவரி முதல் மார்ச் வரை கரைக்கு வந்து, மணலில் குழிதோண்டி முட்டையிட்டு, மூடி வைத்துச் செல்லும். ஒரு ஆமை, 140 முதல், 170 முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளை பாதுகாக்க, பெசன்ட் நகர், கோவளம், நீலாங்கரை மற்றும் பழவேற்காடு ஆகிய கடற்கரைகளில், ஆமை முட்டைகள் பாதுகாப்பு மையங்களை வனத் துறையினர் அமைத்துள்ளனர். நேற்று அதிகாலை, இந்த ஆண்டுக்கான முதல் ஆமை, பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்து, 119 முட்டைகள் இட்டுச் சென்றது.
இவற்றை சேகரித்த வனத் துறையினர், முட்டை பொரிப்பகத்தில் வைத்துள்ளனர். கடந்தாண்டை விட, இந்தாண்டு ஆமை வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதற்கேற்ப பாதுகாப்பு வசதிகள் செய்துள்ளதாகவும், வனத் துறை அதிகாரிகள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE