சென்னை, : ''ஹிந்து மதத்தை யாராலும் அழிக்க முடியாது,'' என, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் பேசினார்.
தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில், பொங்கல் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அதன் தலைவர் அன்பழகனார் தலைமையில், பட்டினப்பாக்கம் கடற்கரையில் நேற்று நடந்தது.நடிகர் எஸ்.வி.சேகர் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் அன்பழகனார் பேசியதாவது: ஹிந்து மதத்தை யாரும் வளர்க்கவில்லை; அதை யாரும் அழிக்கவும் முடியாது. கல் தோன்றி மண் தோன்றா காலத்திற்கு முன் தோன்றியது ஹிந்து மதம். அரசியலில், மீனவர்களுக்கென அங்கீகாரம் பெற்று தந்தது.
தமிழ்நாடு மீனவர் பேரவை. ஐந்து உயிர்களை கொடுத்து, டீசல் மானியத்தை, மீனவர்களுக்காக பெற்று தந்தோம். மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்களுக்கு நிவாரணத் தொகையை, பல்வேறு போராட்டங்களை நடத்தி வாங்கி கொடுத்தோம்.இவ்வாறு, அவர் பேசினார்.நடிகர் எஸ்.வி.சேகர் பேசியதாவது:அன்பழகனார், பல ஆண்டுகளாக தன் சொந்த பணத்தில், மீனவ மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். சென்னை முதல் குமரி வரை, தமிழ்நாடு மீனவர் பேரவையில், 28 லட்சம் பேர் உள்ளனர்.
ஓட்டு வங்கி சதவீதத்தில், 2 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர்.கடந்த தேர்தலில், 1 சதவீதம் ஓட்டு வித்தியாசத்தில் தான், ஒரு கட்சி தோற்றுப்போனது. மீனவர்களின் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுகின்றனரோ, அவர்களுக்கு தான் ஓட்டு என, சொல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE