சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசிடம் போன் 'ஆட்டை' கீழ்ப்பாக்கம் நபர்கள் கைது

Added : ஜன 12, 2021
Share
Advertisement
கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கத்தில், போலீசிடம் மொபைல் போன் பறித்தவர்கள், கைது செய்யப்பட்டனர். கீழ்ப்பாக்கம், 'சைபர் கிரைம்' பிரிவில், காவலராக பணிபுரிபவர் தினேஷ், 30. இவர், 9ம் தேதி, கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் நடந்து சென்றபோது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.இது குறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், சத்யா

கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கத்தில், போலீசிடம் மொபைல் போன் பறித்தவர்கள், கைது செய்யப்பட்டனர்.

கீழ்ப்பாக்கம், 'சைபர் கிரைம்' பிரிவில், காவலராக பணிபுரிபவர் தினேஷ், 30. இவர், 9ம் தேதி, கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையில் நடந்து சென்றபோது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களது மொபைல் போனை பறித்துச் சென்றனர்.இது குறித்து, கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், சத்யா நகரைச் சேர்ந்த ராஜேஷ், 28, அரவிந்த், 28, ஆகிய இருவர், மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது.நேற்று முன்தினம் இரவு, இருவரையும் கைது செய்த போலீசார், மொபைல் போன், இருசக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை, 48 மணி நேரத்திற்குள் கைது செய்த, உதவி ஆய்வாளர் கலைச்செல்வி, தலைமை காவலர் சரவணகுமார் அடங்கிய தனிப் படையினரை, சென்னை போலீஸ் கமிஷனர் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X