சென்னை:முதல்வர் பழனிசாமி., இரண்டு நாள் பயணமாக, வரும், 18ம் தேதி, டில்லி செல்கிறார். பிரதமர் உட்பட பலரை சந்திக்க உள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜெ., நினைவிடம் திறப்பு விழாவை, பிரமாண்டமாக நடத்த, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. சென்னை மெரினாவில், 'பீனிக்ஸ் பறவை' வடிவில், 79.75 கோடி ரூபாய் மதிப்பில், நினைவிடம் அமைக்கப்படுகிறது. பணி முடிவடையும் நிலையில் உள்ளது.இதன் திறப்பு விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடியை அழைக்க, முதல்வர் திட்டமிட்டுஉள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, 18ம் தேதி, முதல்வர் டில்லி செல்கிறார். இரண்டு நாட்கள் அங்கு முகாமிடும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை சந்தித்து, கூட்டணி விவகாரங்கள் குறித்து பேசுகிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE