மருத்துவர் துாக்கிட்டு தற்கொலை-மறைமலை நகர்: வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்தவர் இந்துஜா, 28. இவர், பொத்தேரியில் உள்ள, மருத்துவக்கல்லுாரியில், சீனியர் பேராசிரியராகவும், பெண்கள் விடுதிக்கு வார்டனாகவும் பணிபுரிந்து வந்தார்.இங்குள்ள, விடுதி முதல்மாடியில், ஓர் அறையில், நேற்று முன்தினம், துாக்கிட்டு தற்கொலை செய்தார். மறைமலை நகர் போலீசார், சடலத்தை மீட்டு, அதே மருத்துவமனை பிணவறையில் வைத்து, விசாரிக்கின்றனர்.கஞ்சா விற்றவர் கைதுசெங்கல்பட்டு: செங்கல்பட்டு, புறவழிச்சாலை மற்றும் கிராமங்களில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் வந்தது.நேற்று, போலீசார் வாகன சோதனை செய்தனர்.
அப்போது, பட்டரவாக்கம் வினோத், 34, என்பவர், கஞ்சா விற்பனை செய்ததை அறிந்து, அவரை கைது செய்தனர். 1,200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஊழியரை தாக்கியவர்களுக்கு வலைவண்டலுார்: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார், உத்திரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் மகன் தியாகு, 30. இவர், திருப்போரூர் அடுத்த, ஆலத்துார் தனியார் நிறுவன பொறியாளர். இரண்டு நாட்களுக்கு முன், சேலத்தில் ரயில்வே தேர்வு எழுதி, நேற்று அதிகாலை, வண்டலுார் பஸ் நிறுத்தத்தில் இறங்கினார்.அங்கு வந்த இருவர், தியாகுவை கத்தியால் வெட்டி, அவரது பையை பறித்துச் சென்றனர். கேளம்பாக்கம் தனியார் நிறுவனத்தில் சேர்ந்த தியாகு புகாரை, ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.பழவேற்காடில் மீனவர் பலிபழவேற்காடு: பொன்னேரி அடுத்த, அவுரிவாக்கம், கீழ்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி, 54; மீனவர். இவர், நேற்று முன்தினம் மாலை, பழவேற்காடு முகத்துவாரம் அருகே, ஏரியில் மீன்பிடித்து கொண்டிருந்தார். வலையை சரி செய்யும்போது, அதில் கால் சிக்கி, ஏரியில் தவறி விழுந்தார்.நீரோட்டம் அதிகம் உள்ள பகுதியில், சிகாமணி விழுந்ததால், மூழ்கினார். அவருடன் வந்த உறவினர்கள் அவரை மீட்பதற்குள் மூச்சு திணறி இறந்தார். திருப்பாலைவனம் போலீசார், சிகாமணியின் உடலை கைப்பற்றி, சம்பவம் தொடர்பாக விசாரிக்கின்றனர்.மீனவர் சடலம் மீட்புமீஞ்சூர்: எண்ணுார் எல்லையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன், 40; மீனவர். இவர், கடந்த, 10ம் தேதி, காமராஜர் துறைமுகம் அருகே உள்ள ஆற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார்.ஆற்றில் ஏற்பட்ட திடீர் சுழற்சியில், முருகன் விழுந்து தண்ணீரில் மூழ்கி மாயமானார். முருகனின் உறவினர்கள் அவரை ஆற்றுப்பகுதிகளில் தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம், முருகனின் உடல், அவர் விழுந்து இடத்தின் அருகிலேயே கரை ஒதுங்கி இருந்தது. மீஞ்சூர் போலீசார் உடலை கைப்பற்றி, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE