தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு

Added : ஜன 12, 2021
Share
Advertisement
புதுக்கோட்டை மாவட்டம், வேலம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சாந்தி,19. சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, கணபதி நகரில் தனியார் டையிங் மில்லில் வேலை செய்து வந்தார். நிறுவனத்தின் மேலாளர் ஜெயசீலன், சக ஊழியர்கள் முன் சாந்தியை திட்டினார். மனமுடைந்த சாந்தி, அவர் தங்கியிருந்த அறையில், மின் விசிறியில் சேலையால் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லுார்

புதுக்கோட்டை மாவட்டம், வேலம்பட்டியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகள் சாந்தி,19. சிங்காநல்லுார் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, கணபதி நகரில் தனியார் டையிங் மில்லில் வேலை செய்து வந்தார். நிறுவனத்தின் மேலாளர் ஜெயசீலன், சக ஊழியர்கள் முன் சாந்தியை திட்டினார். மனமுடைந்த சாந்தி, அவர் தங்கியிருந்த அறையில், மின் விசிறியில் சேலையால் துாக்கிட்டுதற்கொலை செய்து கொண்டார். சிங்காநல்லுார் போலீசார் விசாரித்து, மேலாளர் ஜெயசீலன் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். 9 சவரன் நகை பறிப்புசுந்தராபுரம், இடையர்பாளையம் ரோட்டை சேர்ந்த முரளிதரனின் தாயார், நேற்று முன்தினம் இரவில், அருள்மாரியம்மன் கோவில் அருகில் நடந்து சென்றார். பைக்கில் வந்த ெஹல்மெட் அணிந்த இருவர், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த, 9 சவரன் தங்க செயினை பறித்து தப்பினர். குனியமுத்துார் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.ரூ.1.5 லட்சம் பைக் திருட்டுசாய்பாபாகாலனி, கே.கே.புதுார், காமராஜர் வீதியில் வசிக்கும் கவுதமன் ராமையா, 24, இரவில் வீட்டு முன், யமகா பைக்கை நிறுத்தி விட்டு துாங்கினார். காலையில் பைக் திருட்டு போனது தெரிய வந்தது. அதன் மதிப்பு 1.5 லட்சம் ரூபாய். சாய்பாபா காலனி போலீசார் வழக்கு பதிந்து, பைக் திருடிய ஆசாமியை தேடி வருகின்றனர்.காவலாளி திடீர் மாயம்பீளமேடு பாலசுப்பிரமணி நகரை சேர்ந்த செந்தில்குமார்,49. காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு தொடர்ந்து கால் வலி ஏற்பட்டதால், மூன்று மாதமாக வேலைக்கு செல்லவில்லை. மது பழக்கத்துக்கு அடிமையான இவர், கடந்த மாதம் போதையில் வீட்டை விட்டு சென்றார். மீண்டும் திரும்பவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் பேரில், பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X