பூந்தமல்லி : பூந்தமல்லி அருகே, டேங்கர் லாரி மீது பஸ் மோதிய விபத்தில், 16 பயணியர் காயமடைந்தனர்.
தாம்பரம் - பூந்தமல்லி, தடம் எண்: 66 பஸ், நேற்று காலை, 11:45 மணிக்கு, பூந்தமல்லி நோக்கி சென்றது. பஸ்சை, பூந்தமல்லியைச் சேர்ந்த ஜெயராமன், 40, என்பவர் ஓட்டினார்.குமணன்சாவடி அருகே சென்றபோது, சிக்னலில் நின்ற டேங்கர் லாரி மீது, எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில், பஸ்சில் பயணம் செய்த, 12 பெண்கள், நான்கு ஆண்கள் என, மொத்தம், 16 பேர் லேசாக காயமடைந்தனர்.இவர்கள், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
பல்லாவரம் அடுத்த பொழிச்சலுாரை சேர்ந்த சொக்கம்மாள், 49, மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.விபத்து குறித்து, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார், ஓட்டுனர் ஜெயராமனிடம் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE