மாநகராட்சி, 97வது வார்டுக்கு உட்பட்ட, குறிச்சி சிட்கோ, சி.டி.ஓ., காலனி பிரதான சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. இச்சாலையை செப்பனிட வேண்டும் என, 'இன்பாக்ஸ்' பகுதியில், படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, இச்சாலை, மாநகராட்சி ஊழியர்களால், செப்பனிடப்பட்டது.- தங்கவேலு, சி.டி.ஓ., காலனி.
மாங்கல்யா கார்டனுக்கு தீர்வுமாநகராட்சி, 88வது வார்டுக்கு உட்பட்ட, குனியமுத்துார், ஜெ.ஜெ.நகர் - சுண்டக்காமுத்துார் ரோட்டில் இருந்து, மாங்கல்யா கார்டன் செல்லும் ரோடு, குண்டும் குழியுமாக மாறி, பாதி அளவு மட்டுமே உள்ளது. இத்துடன் மழை நேரங்களில், இக்குழிகளில் தேங்கும் நீரால், ரோடு முழுவதும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, 'வாசகர் வாய்ஸ்' பகுதியில், படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள், இச்சாலையை கலவை மணல் கொண்டு தற்காலிகமாக சீரமைத்துள்ளனர். இச்சாலையை தார் சாலையாக அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- செந்தில், மாங்கல்யா கார்டன்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE