கோவை:அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு வழபாடுகள் நடந்தன. வடவள்ளி, ஸ்ரீ பஞ்சமுக விஜய ஆஞ்சநேயர் கோவிலில், காலை முதல் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. சிறப்பு ஆராதனையின் போது, வெற்றிலை, துளசி மாலைகள் அணிவிக்கப்பட்டன.ஒலம்பஸ், கணேசபுரத்தில் உள்ள, சித்தி விநாயகர் கோவிலுள்ள ஆஞ்சநேயர், ராமபக்த அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பீளமேட்டில் உள்ள அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர், கொரோனா தொற்று போன்ற, இக்கட்டான சூழலில் இருந்து உலகை காப்பாற்றும் வகையில், கம்பீர ராஜ மாருதி அலங்காரத்தில், பக்தர்களுக்கு காட்சியளித்தார்.தொப்பம்பட்டி, நவாம்ச ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில், 10வது ஆண்டு, அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. ராஜ மாருதி அலங்காரத்தில் வீற்றிருந்த ஆஞ்சநேயரிடம் பக்தர்கள் மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தனர். கோவில்களில் பக்தர்கள் ராமர், அனுமர் நாமம் பாடி வழிபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE