சென்னை:புனேயில் இருந்து, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500, 'கோவிஷீல்டு' தடுப்பு மருந்துகள், தமிழகம் வந்துள்ளன. மாவட்ட வாரியாக பகிர்ந்தளிக்கப்பட்டு, வரும், 16ம் தேதி முதல், தடுப்பூசி போடப்பட உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்துகளை, நாடு முழுதும் உள்ள பொது மக்களுக்கு செலுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு, அனைத்து மாநில சுகாதார துறையினருடன் இணைந்து எடுத்து வருகிறது. இதற்காக, நாடு முழுதும், தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது.
இந்நிலையில், நாடு முழுதும் உள்ள, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு, முதல் கட்டமாக, 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, சீரம் நிறுவனத்தில் இருந்து, டில்லி, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, விமானம் வாயிலாக தடுப்பூசி அனுப்பப்பட்டது.
அந்த வகையில், நேற்று காலை, 10:30 மணியளவில், புனேயில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500 'டோஸ்'கள், கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்தன. இந்த தடுப்பு மருந்துகள், விமான நிலையத்தில் இருந்து, வாகனம் வாயிலாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள, டி.எம்.எஸ்., வளாகத்தில் உள்ள, மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டன.
பின், அங்கிருந்து, 10 சுகாதார மண்டலங்கள் வாயிலாக, அந்தந்த மாவட்டங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டன. இவற்றை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
பின், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:முதற்கட்டமாக, புனே, சீரம் நிறுவனம் தயாரித்த, ஐந்து லட்சத்து, 36 ஆயிரத்து, 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்து, 45 பெட்டிகளில், சென்னை வந்தடைந்தது. அவை, 10 மண்டல கிடங்குகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 20 ஆயிரம் டோஸ்கள், கோவாக்சின் மருந்து வர உள்ளது. 'கோவின்' செயலியில் தடுப்பு மருந்து செலுத்துபவரின் விபரங்கள் இருக்கும்.
தடுப்பு மருந்து முதல் முறையாக செலுத்திய பின், பயனாளியின் மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும். அதைதொடர்ந்து, 28 நாட்களுக்கு பின், இரண்டாம் முறை தடுப்பூசி செலுத்தப்படும். அதன்பின், முழுமையாக நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும்.இதுவரை, 4.50 லட்சம் முன்கள பணியாளர்கள், தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துள்ளனர். தடுப்பூசி வந்தாலும், பொது மக்கள் முக கவசம், சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மாவட்டங்களுக்கு மருந்து எவ்வளவு?
மண்டலம் - மாவட்டம் - குளிரூட்டப்படும் வசதி - டோஸ்
சென்னை - சென்னை மாநகராட்சி - 175 - 63,700
சென்னை - பூந்தமல்லி - 16 - 5,800
சென்னை - திருவள்ளூர் - 65 - 13,800
சென்னை - செங்கல்பட்டு - 69 - 23,800
காஞ்சிபுரம் - 34 - 10,900
கடலுார் - கடலுார் - 86 - 7,800
கடலுார் - விழுப்புரம் - 74 - 11,500
கடலுார் - கள்ளக்குறிச்சி - 51 - 6,200
திருச்சி - திருச்சி - 97 - 17,100
திருச்சி - அரியலுார் - 43 - 3,300
திருச்சி - பெரம்பலுார் - 34 - 5,100
திருச்சி - அறந்தாங்கி - 42 - 3,100
திருச்சி - புதுக்கோட்டை - 50 - 3,800
திருச்சி - கரூர் - 46 - 7,800
தஞ்சாவூர் - தஞ்சாவூர் - 94 - 15,500
தஞ்சாவூர் - திருவாரூர் - 60 - 6,700
தஞ்சாவூர் - நாகை - 71 - 6,400
மதுரை - மதுரை - 98 - 23,100
மதுரை - திண்டுக்கல் - 45 - 7,300
மதுரை - பழனி - 42 - 5,800
மதுரை - சிவகாசி - 44 - 6,400
மதுரை - விருதுநகர் - 27 - 3,300
மதுரை - தேனி - 49 - 8,200
சிவகங்கை - சிவகங்கை - 63 - 10,700
சிவகங்கை - பரமக்குடி - 35 - 3,600
சிவகங்கை - ராமநாதபுரம் - 35 - 4,700
திருநெல்வேலி - திருநெல்வேலி - 66 - 10,900
திருநெல்வேலி - கோவில்பட்டி - 29 - 3,800
திருநெல்வேலி - கன்னியாகுமரி - 58 - 22,600
திருநெல்வேலி - தென்காசி - 59 - 5,100
திருநெல்வேலி - துாத்துக்குடி - 43 - 9,300
வேலுார் - வேலுார் - 69 - 18,600
வேலுார் - ராணிப்பேட்டை - 0 - 4,400
வேலுார் - திருப்பத்துார் - 67 - 4,700
வேலுார் - திருவண்ணாமலை - 63 - 10,000
வேலுார் - செய்யாறு - 496 - 4,400சேலம் -
சேலம் - 78 - 22,900சேலம் - ஆத்துார் - 45 - 4,900
சேலம் - நாமக்கல் - 73 - 8,700
சேலம் - தர்மபுரி - 57 - 11,800
சேலம் - கிருஷ்ணகிரி - 69 - 11,500
கோவை - கோவை - 107 - 40,600
கோவை - ஈரோடு - 86- 13,800
கோவை - திருப்பூர் - 78 - 13,500
கோவை - நீலகிரி - 44 - 5,300
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE