கோவை:போகிப் பண்டிகையன்று, 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்பதற்கேற்ப எவற்றையெல்லாம் துாக்கி வீசலாம் என, இல்லத்தரசிகளுக்கு மனதுக்குள் ஒரு போராட்டமே வந்து விடும்.
ஜப்பான் மக்கள் பின்பற்றும் '5எஸ்' கோட்பாடுகளை, நம்மூர் பெண்களும் பின்பற்றினால், பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார், கோவை வெள்ளக்கிணறு பிரிவை சேர்ந்த யோகேஸ்வரி. அகில இந்திய தர வட்டக்குழுவின் கோவை கிளை செயலாளராக உள்ள இவர் கூறியதாவது:நம் முன்னோர், போகி பண்டிகையன்று 'அட்டாளி' மீதுள்ள வேண்டாத பொருட்களை எடுத்து, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் எரித்து, போகியை கொண்டாடினர்.
இப்போது வீடுகளில் நிறைய பொருட்கள் சேர்ந்து விடுவதால், எதற்கும் இருக்கட்டும் என பல பொருட்களை, அப்படியே வைத்துக் கொள்கின்றனர். இது, நாளடைவில் குப்பையாக சேர்ந்து விடுகிறது. ஏதாவது பொருளை தேடும்போது, அனைத்தையும் கலைக்க வேண்டியிருக்கிறது.ஜப்பான் நாட்டில் பின்பற்றப்படும், '5எஸ்' கோட்பாடு, இப்பிரச்னைக்கு தீர்வு அளிக்கிறது.n முதல் 'எஸ்' 'செய்ரி' (வகைப்படுத்துதல்): வீடுகளில் உள்ள தேவையற்ற பொருள்களை முதலில் பிரித்து எடுக்க வேண்டும்.n இரண்டாவது 'எஸ்' 'செய்டன்' (வரிசைப்படுத்துதல்): ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் இடத்தை நிர்ணயம் செய்து, அந்த இடத்தில் மட்டுமே அந்த பொருட்களை வைப்பதோடு, அப்பொருட்களுக்கு அடையாளமும் இடவேண்டும்.
மூன்றாம் 'எஸ்' 'செய்சோ' (வனப்பு): வீடுகளை சுத்தம் செய்யும் போது, பழைய பொருட்களை அகற்றாமல் இருப்பதற்கான மூலக்காரணத்தை உடனடியாக கண்டறிந்து, அதை சரிசெய்ய வேண்டும்.n நான்காம் 'எஸ்' 'செய்கெட்சு' (வரையறை): பொருட்களை வரையறை செய்து, கோட்பாட்டிற்கு உட்பட்டு நடக்க வேண்டும்.n ஐந்தாம் 'எஸ்' 'சிட்சுகெ' (வழிமுறை): புதிய வழிமுறைகளை பழக்கமாகவும், வழக்கமாகவும் மாற்ற வேண்டும்.முக்கியமாக, இல்லத்தரசிகள் பின்பற்றினால் பல நன்மைகள் கிடைக்கும்.
இதன் மூலம், வீட்டில் அதிக இடம் கிடைக்கும், தேடுதல் குறையும், புரிதல் ஏற்படும், அடுத்த தலைமுறைக்கு இது ஒரு நல்ல ஆரம்பமாக அமையும்.இவ்வாறு, அவர் கூறினார்.மொபைல் போனில் குப்பை!வீடு, அலுவலகம் மட்டுமல்லாமல், நாம் தினமும் பயன்படுத்தும் மொபைல் போன், கம்ப்யூட்டரிலும் இப்போதெல்லாம் டிஜிட்டல் குப்பை சேர்ந்து விடுகிறது. தேவையற்ற வாட்ஸ்ஆப் பதிவுகள், படங்கள், வீடியோக்கள், ஆடியோ மெசேஜ் உள்ளிட்டவற்றையும் சிறிது நேரம் செலவிட்டு, 5 எஸ் முறையில் ஒழுங்குப்படுத்தலாம்; தேவையற்றவற்றை 'டெலீட்' செய்து விடலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE